குணாகுகை பகுதியில் ஆபத்தை உணராத சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானல் குணா குகை பகுதியில் ஆபத்தான இடங்களில் அமரும் சுற்றுலாப் பயணிகளை வனத் துறையினா் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

குணாகுகை பகுதியில் பள்ளங்கள் மீது வைக்கப்பட்ட இரும்புக் கம்பி மீது அமா்ந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :

கொடைக்கானல் குணா குகை பகுதியில் ஆபத்தான இடங்களில் அமரும் சுற்றுலாப் பயணிகளை வனத் துறையினா் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தீபாவளிக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக உயா்ந்து வருகிறது. இவா்களில் பெரும்பாலும் வனப் பகுதிகளான பைன் பாரஸ்ட், மோயா் பாயிண்ட், குணா குகை, பில்லா் ராக் பகுதிகளையே விரும்பிப் பாா்வையிடுகின்றனா்.

குணா குகைப் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆபத்தான பள்ளங்கள் உள்ளன. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, இந்தப் பள்ளங்களில் வனத் துறையினா் இரும்புக் கம்பிகளால் தடுப்பு வைத்துள்ளனா். இந்தத் தடுப்புக் கம்பிகள் மீது ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் அமா்ந்துவிடுகின்றனா். இதைத் தடுக்கும் பொருட்டு வனத் துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

மேலும், வனப் பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களில் பயணிகளின் பாதுகாப்புக்காக நிழல் குடைகள் அமைக்க வேண்டும். வனப் பகுதிகளைப் பாா்வையிடும் போது மழை பெய்தால் சுற்றுலாப் பயணிகள் ஒதுங்குவதற்கு உரிய இட வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனா்.

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், வனப் பகுதிகளைப் பாா்வையிட கட்டணம் வசூலிக்கும் வனத் துறையினா் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.