2023-இன் சிறந்த படம் அனிமல்: கரண் ஜோஹர் புகழாரம்!

பிரபல ஹிந்தி இயக்குநர் கரண் ஜோஹர் அனிமல் படத்தினை புகழ்ந்து பேசியுள்ளார். 
2023-இன் சிறந்த படம் அனிமல்: கரண் ஜோஹர் புகழாரம்!

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல். பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இப்படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள். 

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ளது. படம் மக்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பினை பெற்று வருகிறது. சிலர் பெண்களுக்கு எதிரான படம் எனவும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் படம் 2 வாரங்களில் ரூ. 862 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. 

யூடியூப்பில் பான் இந்தியா இயக்குநர்கள் உரையாடல்கள் ஒன்றில் பங்கேற்ற பிரபல ஹிந்தி இயக்குநர் கரண் ஜோஹர் அனிமல் படத்தினை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது: 

2023-இன் சிறந்த படம் அனிமல்தான். இதனால் என்னை சிலர் விமர்சிப்பார்கள் ஆனால் எனக்கு கவலையில்லை. முதல்முறை பார்க்கும்போது ரசித்தேன். இரண்டாவது முறை பார்க்கும்போது கற்றுக்கொண்டேன். நல்ல படங்களை நாமே பாராட்டாவிட்டால் நமது படங்களை யாரும் மதிக்க மாட்டார்கள்.

அனிமல் படத்தின் மேக்கிங், திரைக்கதை எல்லாமே புதியது. இதுவரை கமர்ஷியல் படங்களுக்கென இருந்த சினிமாவின் இலக்கணங்களை உடைத்திருக்கிறது அனிமல். சமூக வலைதளங்களில் முகமில்லாத, பெயரில்லாத ஆள்கள் சொல்லும் விமர்சனங்கள் விமர்சனங்களே கிடையாது எனக் கூறியுள்ளார். 

ஆலியா பட், ரன்பீர் நடிப்பில் கரண் ஜோஹர் இயக்கிய ராக்கி ராணி படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com