மம்மூட்டி, ஜீவாவின் ‘யாத்ரா 2’ டீசர் வெளியீட்டுத் தேதி!

நடிகர் மம்மூட்டி, ஜீவா இணைந்து நடிக்கும் ‘யாத்ரா 2’ படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மம்மூட்டி, ஜீவாவின் ‘யாத்ரா 2’ டீசர் வெளியீட்டுத் தேதி!

நடிகர் மம்மூட்டி, ஜீவா இணைந்து நடிக்கும் ‘யாத்ரா 2’ படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ‘யாத்ரா’. மஹி வி ராகவ் இயக்கிய இப்படத்தில் ஒய்.எஸ்.ஆர். கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார்.

தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்கி வருகிறார். இதில், ஒய்.எஸ்.ஆர். மகனும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்தப் படம் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், யாத்ரா 2 படத்தின் டீசர் நாளை மறுநாள்(ஜன.5) காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கைத் திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com