சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

மிஷன் டிரைலர் தேதி அறிவிப்பு!

நடிகர் அருண் விஜய் நடித்துள்ள மிஷன் சேப்டர்-1 படத்தின் டிரைலர் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :4 ஜனவரி 2024, 11:37 am

DIN


முறை மாப்பிள்ளை  படத்தின்  மூலம் நாயகனாக அறிமுகமனவர் நடிகர் அருண் விஜய். பாண்டவர் பூமி, இயற்கை, மலை மலை, தடையற தாக்க ஆகிய படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தைப் பெற்றார். தற்போது, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மிஷன் சேப்டர்-1  ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாகவும் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். 

அருண் விஜய் நடிப்பில், இறுதியாக வெளியான யானை, சினம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்பதால் ஜன.12 ஆம் தேதி வெளியாகவுள்ள மிஷன் சேப்டர்-1  ‘அச்சம் என்பது இல்லையே’ படத்துக்கு  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (ஜன.5) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.