கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

ரசிகர்களைச் சந்தித்த விஜய்: விடியோ

கோட் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் தன் ரசிகர்களைச் சந்தித்த விடியோ வெளியாகியுள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2024, 1:28 pm

DIN

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்கா உள்பட பல இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Story image

 இப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவும் நடிகர் விஜய்யும் இணைந்து ஒரு பாடலைப் பாட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், படப்பிடிப்பின்போது நடிகர் விஜய், தன் ரசிகர்களைச் சந்தித்த விடியோவைத் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.