

நடிகர் சந்தானத்தின் நடிக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாணின் 80-ஸ் பில்டப் என்ற படத்தில் சந்தானம் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
சந்தானம் நடித்து முடித்துள்ள புதிய திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. சந்தானத்துக்கு ஜோடியாக இப்படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் யோகி எழுதி இயக்கியுள்ளார். டி.ஜி. விஷ்வ பிரசாத்தின் பீபுள் மீடியா பேக்டரி இப்படத்தை தயாரிக்க ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இப்படத்துக்கு தீபக் ஒளிப்பதிவு, மகேஷ் மேத்தீவ் சண்டைப் பயிற்சி, அறிவு மற்றும் பாக்கியம் சங்கர் பாடல்களை எழுதியுள்ளனர். வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வருபாக்கியம் சங்கர்ம் பிப். 2 ஆம் தேதி வெளியாகிறது
இதையும் படிக்க: ஹிந்தி தெரியாது போயா... : கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா டீசர்!
இந்த நிலையில், நடிகர் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடலை பாக்கியம் சங்கர் எழுதியுள்ளார். ஷான் ரோல்டன் மற்றும் சந்தானம் இப்பாடலை பாடியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.