சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்த மாமன்னன் படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
தற்போது, கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்துள்ள படம் 'ரகு தாத்தா'. ஃபேமிலி மேன் எனும் விருது பெற்ற படைப்பிற்கு கதை எழுதிய எழுத்தாளர் சுமன் குமார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒய். யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ரகு தாத்தா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக படத்தில் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கீர்த்தி சுரேஷின் வசனங்கள் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் கவனம் பெற்று வருகிறது.
இதையும் படிக்க: மாற்றத்துக்காக பயப்படாதீர்கள்: அமலா பால் பகிர்ந்த புதிய விடியோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குரல் அழைப்பு தரத்தை மதிப்பிட மேம்பட்ட ‘மைகால்’ செயலி: ட்ராய் அறிமுகம்

தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்பு

நேபாளம்: மதக் கலவரத்தால் பாதித்த மாவட்டங்களில் திரும்பிய இயல்புநிலை

உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



