பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை!

மாற்றத்துக்காக பயப்படாதீர்கள்: அமலா பால் பகிர்ந்த புதிய விடியோ!

நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய விடியோவினை பகிர்ந்துள்ளார். 

Published On :

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலா பால். விஜய்யின் தலைவா போன்ற பெரிய படங்களில் நாயகியாக நடித்தவர். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார்.

இறுதியாக, அவர் நடிப்பில் ஓடிடி வெளியீடாக வந்த ‘டீச்சர்’, 'கிறிஸ்டோபர்’ படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார். 

அவ்வபோது பயணங்கள் மேற்கொள்ளும் அமலா பால், கடந்த அக்.26இல் தனது பிறந்தநாளில் காதலரை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து இருவரும் தற்போது திருமணம் செய்துகொண்டனர். 

Story image

கேரள மாநிலம் கொச்சியிலுள்ள விடுதியில் எளிமையான முறையில் அமலா பால் - ஜகத் தேசாய் திருமணம் நடைபெற்றது. 

சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அமலாபால் புகைப்படத்தினை பகிர்ந்திருந்தார்.

Story image

இந்நிலையில் ஒரு விடியோவினை வெளியிட்டு அதில், “மாற்றத்துக்காக பயப்படாதீர்கள். டார்வின் கூறியபடி, மிகவும் வலுவான, மிகவும் புத்திசாலியான இனங்கள் எதுவும் வாழ்வதில்லை. யார் மற்றத்துக்கு உட்படுகிறார்களோ அவர்களே பிழைக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.