

நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார் நடித்துள்ள படம் 'ஃபைட் கிளப்'. அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் மூலம் வெளியிட்டார்.
கடந்த டிச. 15 ஆம் தேதி வெளியான 'ஃபைட் கிளப்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முழுக்க ஆக்சன் பாணியில் அதிரடியாக உருவாகியிருந்த இப்படத்தில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை ரசிகர்களைக் கவர்ந்தது.
ரூ.3 கோடியில் உருவான இப்படம் ரூ.9 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொங்களுக்கு வெளிவருமென காத்திருந்த நிலையில் தற்போது, இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று (ஜன்.27) வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.