சந்தானம் நடித்து முடித்துள்ள புதிய திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. சந்தானத்துக்கு ஜோடியாக இப்படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் யோகி எழுதி இயக்கியுள்ளார். டி.ஜி. விஷ்வ பிரசாத்தின் பீபுள் மீடியா பேக்டரி இப்படத்தை தயாரிக்க ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: சைரன் அப்டேட்!
வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வரும் பிப். 2 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் ஆர்யாவும் சந்தானமும் இணைந்து நடிக்க உள்ளனர். இதுகுறித்த தகவலை ஆர்யா தெரிவித்திருக்கிறார்.