47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சங்கி கெட்ட வார்த்தையில்லை : ரஜினிகாந்த்

சங்கி என்பது கெட்ட வார்த்தையில்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:39 am

DIN

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த், நாயகனான விஷ்ணு விஷால் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ஆகியோருக்கான டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளது. பிப்.9 ஆம் தேதி படம் வெளியாகிறது.

‘லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த, “என்னிடம் பல பேர் பேசுவார்கள். அப்பா, அம்மா குறித்து பேசுவார்கள். பின்னர் கதை குறித்து பேசினால் எப்படியாவது நடக்காமல் போய்விடும். சில நேரங்களில் நம்மிடம் பேசுவது அப்பாவின் மீதுள்ள மரியாதைக்காக பேசுவார்கள். எனது கதையைக் கேட்க யாருக்கும் நம்பிக்கையில்லை. எனது அப்பாவுக்காக மட்டுமே என்னிடம் பேசுவார்கள். ரஜினி மகள் என்பதால் யாருக்கும் பட வாய்ப்பு கிடைப்பதில்லை. திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். 

அப்பாவை சமூக வலைதளங்களில் சங்கி, சங்கி என அழைப்பது தெரிந்தது. அப்பாவை சங்கி எனச் சொல்லும்போது கோபம் வரும். அவர் சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்கமாட்டார். ரஜினிகாந்த் சங்கி கிடையாது. மனிதநேயமிக்க ஒருவர்தான் இதில் நடிக்க முடியும்” என உணர்ச்சிவசமாக பேசினார். 

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரஜினியைக் கண்ட பத்திரிகையாளர்கள் ஐஸ்வர்யாவின் பேச்சு குறித்து கேள்வியெழுப்பினர். இதற்கு, நடிகர் ரஜினிகாந்த், “சங்கி என்பது கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா சொல்லவில்லை. அனைத்து மதத்தையும் விரும்பும் ஆன்மீகவாதியான அவர் தந்தையை சங்கி என ஏன் சொல்கிறார்கள் என்கிற அவரின் பார்வையைத்தான் பேசினார். படத்தின் புரோமோஷனுக்காக பேசவில்லை.” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.