இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி (47) உடல்நலக் குறைவு காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (ஜன.25) உயிரிழந்தாா்.
அவரது உடலை, இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமம், லோயா்கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையில் குருவனூத்து பாலம் அருகே இளையராஜா கட்டியுள்ள குருகிருபா வேதபாடசாலை ஆசிரமத்தில் நல்லடக்கம் செய்தனர்.
இதையும் படிக்க: பவதாரணியின் மறைவையொட்டி... புற்றுநோய்: வலியும் வாழ்வும்
நல்லடக்கம் செய்வதற்கு முன், பவதாரிணி பாடிய ‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடலைக் குடும்பத்தினர் பாடினர். அதில், இளையராஜாவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. சிலர் இணைந்து பாடிய இப்பாடல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இயக்குநரும் பவதாரணியின் சகோதரருமான வெங்கட் பிரபு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நாங்கள் எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படம்” என பவதாரணியுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க: மனசாட்சியின் மாமனிதர் காந்தி: கமல்ஹாசன்
அதில், பவதாரணிக்கு வெங்கட் பிரபு அன்பாக முத்தம் தருகிறார். இந்தப் படத்தைப் பார்த்த பலரும் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.