நடிகை நிவேதா தாமஸ்
நடிகை நிவேதா தாமஸ்

நிவேதா தாமஸின் புதிய பட டீசர்!

நடிகை நிவேதா தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
Published on

நடிகை நிவேதா தாமஸ் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய்யுடன் ஜில்லா, ரஜினியுடன் தர்பார் படங்களில் நடித்து கவனம் பெற்றவர். முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் கதாநாயகி வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் நிதானமாக படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக சாகினி டாகினி (தெலுங்கு), எந்தாடா சஜி (மலையாளம்) நல்ல வரவேற்பைப் பெற்றன.

நடிகை நிவேதா தாமஸ்
புதிய தோற்றத்தில் சத்யராஜ்! எந்தப் படத்துக்காக?

இந்நிலையில் தனது புதிய படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். ’35 சின்ன கத காது’ என்ற இப்படத்தினை சுரேஷ் புரடக்‌ஷன்ஸ் உடன் மற்ற 2 நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க நந்த கிஷோர் ஏமானி இயக்கியுள்ளார்.

நடிகர் ராணா டகுபதி இந்தப் படத்தினை வெளியிடவிருக்கிறார். கௌதமி, பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com