‘வுல்வரின்’ பட நேர்காணலில் முதலில் தேர்வாகவில்லை! மறக்க முடியாத அனுபவத்தைப் பகிர்ந்த ஹக் ஜாக்மேன்!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஹக் ஜாக்மேன் வுல்வரின் தொடக்க காலத்து அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
ஹாலிவுட் நடிகர் ஹக் ஜாக்மேன்
ஹாலிவுட் நடிகர் ஹக் ஜாக்மேன்
Published on
Updated on
2 min read

மார்வெல் காமிக்ஸின் மூலம் பிரபலமான டெட்பூல், வுல்வரின் நாயகர்கள் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்கள். இதற்கு ‘டெட்பூல் வுல்வரின்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. வுல்வரின் படத்து நாயகன் ஹக் ஜாக்மேனை திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் 2007 முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் முதல் படம் 2008இல் வெளியானது. இதுவரை 33 படங்கள் இந்த யுனிவர்ஸில் வெளியாகியுள்ளது. தயாரிப்பு, படப்பிடிப்பு, வெளியீட்டுக்கு தயாராகுதல் என 11 படங்கள் பல்வேறு கட்டங்களில் இருக்கின்றன.

ஹாலிவுட் நடிகர் ஹக் ஜாக்மேன்
விம்பிள்டன் பதிவிட்ட ஆவேஷம் பட பாடல் வைரல்!

உலக அளவில் இதுவரை அதிகமாக வசூலித்த சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்றால் அது இதுதான். 29.8 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,980 கோடி டாலர்) வசூலித்து அசத்தியுள்ளது.

இந்தப் படத்தின் புரமோஷனுக்காக ஆங்கில இதழில் பேட்டியளித்த நடிகர் ஹக் ஜாக்மேன் கூறியதாவது:

வுல்வரின் படத்துக்கான ஆடிசனில் (நேர்காணலில்) நான் கிட்டதட்ட தோல்வியுற்றேன். எனக்கு நீங்கள் (மார்வெல் ஸ்டூடியோஸ் தலைவர்) அப்போது உணவு அளித்திருக்க வேண்டிய அவசியமில்லை. உணவும் வாங்கிக்கொடுத்து விமான நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்ததை நான் என் வாழ்வில் மறக்கவே மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

ஹாலிவுட் நடிகர் ஹக் ஜாக்மேன்.
ஹாலிவுட் நடிகர் ஹக் ஜாக்மேன்.
ஹாலிவுட் நடிகர் ஹக் ஜாக்மேன்
தலைமுடிதான் மகுடம்: ஆனால்,... : புற்றுநோயால் முடியை இழக்கும் நடிகை தன்னம்பிக்கை!

தற்போதைய மார்வெல் ஸ்டூடியோஸின் தலைவர் (கெவின் பெய்கி) அப்போது தயாரிப்பாளரின் உதவியாளராக இருந்தார்.

ஆரம்பத்தில் வுல்வரின் கதாபாத்திரத்துக்கு டக்ரே ஸ்காட் தேர்வாகியிருந்தார். இவருக்கு மிஷன் இம்பாசிபல் 2 திரைப்படம் படப்பிடிப்பு வேலை இருந்தது. அப்போது டாம் குருஸ் 2 படங்களில் நடிக்க அனுமதி வழங்கவில்லை. அதனால் இவர் வுல்வரின் பட வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

டக்ரே ஸ்காட்
டக்ரே ஸ்காட்

இதுவரை வுல்வரின் கதாபாத்திரம் வைத்து 9 படங்கள் வெளியாகிவிட்டன. தற்போது 10ஆவது படமாக ‘டெட்பூல் வுல்வரின்’ வெளியாகவுள்ளது. இந்தப் படம் வரும் ஜூலை 26ஆம் நாள் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com