தலைமுடிதான் மகுடம்: ஆனால்,... : புற்றுநோயால் முடியை இழக்கும் நடிகை தன்னம்பிக்கை!

பாலிவுட் நடிகை ஹினா கான் தனது தலைமுடி குறித்து பதிவிட்டது வைரலாகியுள்ளது.
பாலிவுட் நடிகை ஹினா கான்
பாலிவுட் நடிகை ஹினா கான்
Published on
Updated on
1 min read

பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான் தனக்கு புற்றுநோய் இருப்பதை சமீபத்தில் அறிவித்துள்ளார்.

நடிகை ஹினா கான் (36) பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பாராட்டுகளைப் பெற்றவர்.

பிக்பாஸ் 14 நிகழ்ச்சியில் பங்குபெற்று கவனம் ஈர்த்தார். சமீபத்தில், இவர் புற்றுநோய் தொடர்பாக சிகிச்சை எடுத்து வருவதாகத் தகவல் வெளியானது. இது, வதந்தியாகவே இருக்கும் என ரசிகர்கள் நம்ப மறுத்தனர். பின்னர் ஹினா கான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு 3ஆம் கட்ட மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறி அதிர்ச்சியளித்தார்.

பாலிவுட் நடிகை ஹினா கான்
தங்கச் சிலை மாளவிகா மேனன்...!

பாலிவுட் நடிகைகள் சோனாலி, தாகிரா காஷ்யப் (நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாவின் மனைவி), மனிஷா கொய்ராலா உள்ளிட்டோரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை சமந்தா உள்பட பலரும் இவருக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார்கள். இந்நிலையில் அவரது இன்ஸ்டா பதிவு வைரலாகிறது. அந்தப் பதிவில் ஹினா கான் கூறியதாவது:

இந்த உலகத்தில் அழகான பல மனிதர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக பெண்கள் இந்த நோயுடன் போராடுவதன் கடினம் எனக்கு தெரியும். நமக்கு தலைமுடிதான் மகுடம் போன்றது. யாரும் அதை கழட்ட விரும்பமாட்டார்கள். ஆனால் போராட்டம் கொடியதாக இருக்கும் சமயத்தில் உங்களது தலைமுடியை இழக்கவே செய்ய வேண்டும். உங்களது கௌரவம், மகுடம்?

நான் இந்தப் போராட்டத்தில் வெற்றியடைய விரும்புகிறேன். அதனால் எனக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்பில்கூட நான் வெற்றியடைய நினைக்கிறேன். முடி இழக்கும் முன்பே அதனை வெட்டிவிட முடிவடுத்தேன்.

பாலிவுட் நடிகை ஹினா கான்
புதியதாக தயாரிக்கப்பட்ட உணவு! தன்னைத்தானே புகழ்ந்துகொண்ட பூஜா ஹெக்டே!

உண்மையான மகுடம் என்பது எனது தன்னம்பிக்கையும் வலிமையும் என்னை நானே காதலிப்பதும்தான்.

இந்தக் கால கட்டத்தில் எனக்கான விக்கினை (செயற்கை முடி) எனது சொந்த முடியை வைத்தே தயாரிக்கவிருக்கிறேன்.

தலைமுடி, புருவ முடிகள் மீண்டும் வளரும். வடுகள் மறையும். ஆனால் எனது தன்னம்பிக்கை மட்டுமே முழுமையானது; மாறாதது. எனது பயணத்தை நான் விடியோவாக பதிவு செய்கிறேன். எனது துன்பமுறுகிற இந்த அனுபவம் மற்றவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயனளிக்கும் எனவும் இதிலிருந்து மீண்டு வர உற்சாகத்தை அளிக்குமெனவும் நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com