12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

காளிதாஸ் 2 பூஜை விடியோ! சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?

நடிகர் பரத் நடிப்பில் உருவாகும் காளிதாஸ் 2 படத்தின் பூஜை விடியோ வெளியாகியுள்ளது.

பரத், சிவகார்த்திகேயன்.

Published On :

ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் பரத். பின்னர் காதல், வெயில், பழனி போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

தனது 50ஆவது படமாக மலையாளத்தில் வெளியான லவ் எனும் படத்தினை அதே பெயரில் ரீமேக் செய்து நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான இப்போதைக்கு காதல் ஆஹா தமிழில் வெளியானது.

2019இல் காளிதாஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். ஸ்ரீ செந்தில் இயக்கிய இந்தப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இதற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதன் பூஜை விடியோ வெளியாகியுள்ளது.

இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார். இந்தப் படத்தினை ஸ்கை பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

படத்தின் பூஜை

படத்தின் பூஜை

இதில் பேசிய சிவகார்த்திகேயன், “வெற்றிப் பெற்ற படத்தின் இரண்டாம் பாகம். படத்தின் கூட்டணி வலுவாக அமைந்துள்ளது. இதன் வெளியீட்டாளர் எனக்கு முதலில் இருந்தே நல்ல பழக்கம். படம் வெற்றி பெற வாழ்த்துகள்” எனக் கூறியிருந்தார்.

சிவகார்த்திகேயன் தற்போது முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.