ஜான் சீனா
ஜான் சீனா

ஆனந்த் அம்பானி திருமணத்துக்காக இந்தியா வந்த ஹாலிவுட் நடிகர்!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா இந்தியா வந்துள்ளார்.
Published on

டபள்யூ.டபள்யூ.இ என்று அழைக்கப்படும் தொழில்முறை மல்யுத்தப் போட்டியில் ஜான் சீனா எனும் மல்யுத்த வீரர் மிகப் பிரபலம். இதில் சுமார் 16 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 

நடிகர் ஜான் சீனா ஆஸ்கர் விருது விழாவில் நிர்வாணமாக மேடையில் தோன்றியது சலசலப்பினை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

 ஜான் சீனா
லஞ்சம்... ஊழல்... வர்மம்... இந்தியன் - 2 திரை விமர்சனம்!

ஜான் சீனா தோனியின் புகைப்படத்தினை பகிர்ந்திருந்தார். இவர் இந்திய பிரபலங்களின் படத்தைப் பகிர்வது இது முதல்முறை இல்லை. அவர் ஏற்கனவே, பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக் கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோரின் படங்களைப் பகிர்ந்துள்ளார். 

முகேஷ் அம்பானி - நீதா தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் அம்பானியின் இல்லத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

 ஜான் சீனா
ஹன்சிகாவின் காந்தாரி டிரைலர்!

இந்நிலையில் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்வுக்கு ஜான் சீனா இந்தியா வந்துள்ளார். இன்று திருமணம் நடைபெறும், ஜூலை 13, 14ஆம் தேதிகளில் ரிஷப்ஷனும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜான் சீனாவின் 3 படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com