திமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குமேற்கு வங்கம்: மமதா ஆதரவு எம்எல்ஏ காா் மீது மீண்டும் தாக்குதல்! பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விதிக்கப்பட்ட விலக்கு வாபஸ்பட்டாசு விலை 25% உயர்வு

எல்லாப் பிரச்னைகளுக்கும் இந்தியன் தாத்தா வரமாட்டார்..! சீமானின் இந்தியன் 2 விமர்சனம்!

நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தைப் பார்த்த சீமான் புகைப்படம் வைரல்.

கமல்ஹாசனுடன் சீமான்.

Published On :

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை இன்று மட்டும் திரையிட தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் 28 ஆண்டுகள் கழித்து இன்று (ஜூலை 12) உலகம் முழுவதும் வெளியானது.

இந்தப் படத்தில் கமலுடம், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தினை பிரபலங்களுக்காக திரையிடப்பட்டது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் கலந்துகொண்டார். சீமான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கமலுடன் படம் பார்த்த சீமான், “திரைக்கலை அறிவியலின் அற்புதமான குழந்தை. பொழுதுபோக்கு படமாக அல்லாமல் நல்ல பொழுதாக அமையும் படம். ஒவொரு தோற்ற மாறுதலுக்கும் உடல்மொழியை மாற்றி கமல் நன்றாக நடித்துள்ளார். நமது பிரச்னையை சரிசெய்ய இறைதூதர் வரமாட்டார். நாம்தான் இறங்கி செய்ய வேண்டும். நீ உன் வீட்டை சுத்தம் செய் உலகம் மாறுமென படம் கூறுகிறது. எல்லாவற்றுக்கும் இந்தியன் தாத்தா வரமாட்டார். நோய் தீரும்வரை மருந்து தரவேண்டும். அதனால் பல இந்தியன்கள் வரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.