உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்க்கும் நேற்று (ஜூலை 12) திருமணம் நடைபெற்றது.
மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் இத்திருமண விழாவில் இந்தியா மட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள முக்கிய தலைவர்களும் பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளெய்ர் தனது மனைவியுடன் மும்பையிலுள்ள ஜியோ உலக மையத்தில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்று சிறப்பித்துள்ளார்.
இத்திருமண விழாவில் இந்திய திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டுள்ளனர். கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர்கள் ரஜினிகாந்த், சல்மான் கன், ஷாருக் கான், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, இந்தி நடிகர்கள் சஞ்சய் தத், கியாரா அத்வானி, சன்னி தியோல் என பெருந்திரளாக பல தரப்பினரும் பங்கேற்றனர்.
நடிகர் ரஜினியும் இதில் கலந்துகொண்டார். அதில் ரஜினி நடனம் ஆடிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினி தற்போது லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.