கங்குவா திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. இதில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டி (நடராஜ்) நடித்துள்ளனர்.
மேலும் அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், கங்குவா முதல் பாடலை சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.