ரமேஷ் நாராயணின் மன்னிப்பு போலியானது: தயன் ஸ்ரீனிவாசன்!

ஆசிப் அலியிடம் தவறாக நடந்துகொண்ட ரமேஷ் நாராயணின் மன்னிப்பு இயல்பானதாக இல்லையென இயக்குநர் தயன் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.
ஆசிப் அலி, ரமேஷ் நாராயண், வினித், தயன் ஸ்ரீனிவாசன்.
ஆசிப் அலி, ரமேஷ் நாராயண், வினித், தயன் ஸ்ரீனிவாசன்.
Published on
Updated on
1 min read

இசையமைப்பாளர் ரமேஷ் நாராயண் நடிகர் ஆசிஃப் அலியிடமிருந்து விருதைப் பெற மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் சிறுகதைகளிலிருந்து உருவான ஆந்தாலஜி தொடரின் டிரைலர் வெளியீட்டு விழாவில் ரமேஷ் நாராயணுக்கும் நினைவு விருதைக் கொடுப்பதாக அறிவித்தனர். ஆனால், அந்த விருதிற்காக அவரை மேடைக்கு அழைக்காமல், அவர் அமர்ந்திருந்திருந்த இடத்திற்கே விருதைக் கொண்டு சென்று நடிகர் ஆசிஃப் அலி கொடுத்தார்.

ரமேஷ் நாராயண் ஆசிஃப் அலியிடமிருந்து விருதைப் பெற மறுத்து, இயக்குநர் ஜெயராஜின் கைகளில் கொடுத்து அவரிடமிருந்து பெற்றுக்கொண்டார். இச்சம்பவம்தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஆசிப் அலி, ரமேஷ் நாராயண், வினித், தயன் ஸ்ரீனிவாசன்.
ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்ற அல்லு அர்ஜுன்! புஷ்பா 2 வெளியாவதில் தாமதம்?

இது குறித்து ஆசிப் அலி, “எனக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு நன்றி. அதே சமயத்தில் ரமேஷ் நாராயணனின் மீது வெறுப்பைப் பரப்பாதீர்கள்” எனக் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வருஷங்களுக்கு சேஷம் போஸ்டர்.
வருஷங்களுக்கு சேஷம் போஸ்டர்.
ஆசிப் அலி, ரமேஷ் நாராயண், வினித், தயன் ஸ்ரீனிவாசன்.
மக்கள் நம்மை கீழிறக்க முயற்சிப்பார்கள்..! ஆசிப் அலிக்கு ஆதரவளித்த அமலா பால்!

மலையாளத்தில் பிரபலமான நடிகர் ஸ்ரீனிவாசன். இவரது மகன் வினீத் ஸ்ரீனிவாசனும் பிரபல நடிகரும் திரைக்கதையாசிரியம் ஆவார். இவரது மற்றொரு மகனான தயன் ஸ்ரீனிவாசன் இவரும் பல படங்களில் நடிகராகவும் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.

வருஷங்களுக்கு சேஷம் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஆசிப் அலி சர்ச்சையில் நடிகை அமலா பால் ஆதரவு தெரிவித்த நிலையில் தயன் ஸ்ரீனிவாசன் கூறியதாவது:

ரமேஷ் நாராயணனின் மன்னிப்பு உண்மையானதாக தெரியவில்லை. அவரது பெயர் சந்தோஷ் நாராயணன் என தவறாக உச்சரித்ததற்காக அவர் வருந்தியிருக்கலாம். ஆனால் அதற்காக ஆசிப் அலியிடம் இப்படி நடந்திருக்க வேண்டியதில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com