தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மக்கள் நம்மை கீழிறக்க முயற்சிப்பார்கள்..! ஆசிப் அலிக்கு ஆதரவளித்த அமலா பால்!

நடிகை அமலா பால் மலையாள நடிகர் ஆசிப் அலிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

ஆசிப் அலிக்கு ஆதரவளித்த அமலா பால். - படங்கள்: இன்ஸ்டா / அமலா பால்

Published On :

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலா பால். விஜய்யின் தலைவா போன்ற பெரிய படங்களில் நாயகியாக நடித்தவர். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார்.

பின்னர், ஜகத் தேசாய் உடன் திருமணம் ஆகி சமீபத்தில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் அமலா பால்.

பிரபல இயக்குநர் ஜித்து ஜோசப் வழங்கும் லெவல் கிராஸ் படத்தில் நடித்துள்ளார். ஜித்து ஜோசப்பிடம் உதவி இயக்குநராக இருந்த அர்பாஜ் அயூப் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார்.

இந்தப் படம் வரும் ஜூலை 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில்தான் நடிகை அமலா பால் பாடகியாகவும் முதல்முறையாக அறிமுகமாகியுள்ளார்.

லெவல் கிராஸ்

லெவல் கிராஸ்

எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய சிறுகதைகளை மையமாக வைத்து 8 இயக்குநர்கள் 9 குறும்படங்களை இயக்கியுள்ளனர். ஆந்தாலஜி கதைகளாக உருவாகியுள்ள இத்தொடருக்கு 'மனோரதங்கள்' எனப் பெயரிட்டுள்ளனர்.

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் ஃபாசில், பிஜூ மேனன், நதியா, பார்வதி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தற்போது, இதன் டிரைலர் வெளியாகியுள்ளது. இதற்கு, நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார். இத்தொடர், வருகிற ஆக.15 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இதன் அறிமுக நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் நாராயாணன் ஆசிப் அலியிடம் விருது வாங்க மறுத்து இயக்குநரிடம் கேட்டு வாங்கியது சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கு மன்னிப்பு கேட்டு அவர் பதிவிட்டாலும் சமூக வலைதளத்தில் ஆசிப் அலிக்கு ஆதரவு பெருகிவருகின்றன.

இந்நிலையில் அமலா பால் உடன் லெவல் கிராஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். எர்ணாகுளத்தில் உள்ள செயின்ட் ஆல்பர்ட் கல்லூரியில் லெவல் கிராஸ் படக்குழு படத்தின் புரமோஷனுக்காக வந்திருந்தனர். இதில் அமலா பால், ஆசிப் அலி, இயக்குநர் அர்பாஸ் வந்திருந்தனர். ஆசிப் அலிக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

இதில் நடிகை அமாலா பால், “ நாம் வாழ்க்கையில் எதிர்பாராத பல சூழ்நிலைகளை சந்திப்போம். மக்கள் சில நேரங்களில் நம்மை கீழிறக்க முயற்சிப்பார்கள். ஆனால் நாம் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை பொருத்தது. ஆசிப் அலியை நினைத்து பெருமையாக இருக்கிறது. எனது மிகவும் விருப்பமான நடிகர்களில் ஒருவர் ஆசிப் அலி” எனப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.