நித்யா மேனன்
நித்யா மேனன்படங்கள்: இன்ஸ்டா/ நித்யா மேனன்

ஜூலை மாத மழை...! பாடல் பாடி விடியோ வெளியிட்ட நித்யா மேனன்!

நடிகை நித்யா மேனன் மழையை ரசித்து பாடல் பாடி விடியோ வெளியிட்டுள்ளார்.
Published on

கன்னட படத்தின் மூலம் 2006-இல் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார் நித்யா மேனன்.

குறிப்பாக, தமிழில் அவர் நடிப்பில் வெளியான, ‘காஞ்சனா - 2’, ‘ஒகே கண்மணி’, ‘மெர்சல்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.

அவர் நடிப்பில் உருவான ‘குமாரி ஸ்ரீமதி’, 'மாஸ்டர்பீஸ்’ ஆகிய இணையத்தொடர்களும் நல்ல வரவேற்பினைப் பெற்றன.

நித்யா மேனன்
நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!

தற்போது காதலில் தோல்வியடைந்த பெண் பாத்திரத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார். இதற்கு 'டியர் எக்ஸஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் காமினி இயக்குகிறார்.

டியர் எக்ஸஸ் போஸ்டர்
டியர் எக்ஸஸ் போஸ்டர்

கிருத்திகா உதயநிதி இயக்கும் காதலிக்க நேரமில்லை படத்திலும் நடித்து வருகிறார்.

நித்யா மேனன்
நான் இசையமைத்த பாடலில் மாற்றம்: சந்தோஷ் நாராயணன் பதிவால் சர்ச்சை!

இந்நிலையில் பெங்களூரில் தனது வீட்டில் ஜூலை மாத மழையை ரசித்து பாடல் பாடி விடியோ வெளியிடுள்ளார். அதில், “பெங்களூரில் ஜூலை மாதத்தில் அரிதாகத்தான் வீட்டில் இருப்பேன். மரங்களுக்கு இடையிலும் பெங்களூரின் மேகங்களுக்கு மத்தியிலும் வீட்டில் இருப்பது எப்போதும் மகிழ்ச்சியானது” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com