பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் அசோகனின் கார் விபத்து!

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் ப்ரோமன்ஸ் பட நடிகர்களுக்கு காயம்

News image
கோப்புப் படம்
Updated On :27 ஜூலை 2024, 4:57 am

DIN

ப்ரோமன்ஸ் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகர்கள் காயமடைந்தனர்.

ப்ரோமன்ஸ் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். அருண் ஜோஸ் இயக்கத்தில், ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில் ப்ரோமன்ஸ் திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், கொச்சியில் இன்று (ஜூலை 27) அதிகாலை 1.30 மணியளவில் எம்.ஜி. சாலையில் நடந்த இந்த படப்பிடிப்பின் போது, விபத்து ஏற்பட்டது.

கார் ஓட்டும் காட்சி படமாக்கப்பட்ட போது, கட்டுப்பாட்டை இழந்த கார் வேறொரு கார் மீது மோதியதில், காரினுள் இருந்த மலையாள நடிகர் அர்ஜூன் அசோகன், பிரேமலு பட நடிகர் சங்கீத் பிரதாப், மேத்யூ தாமஸ் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் காயமடைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, உணவு டெலிவரி செய்யும் ஒருவரின் பைக்கின் மீது மோதியதால், அவரும் காயமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, எவ்வித முன்னேற்பாடுகளும் இன்றி படப்பிடிப்பு நடத்தியதாகக் கூறி, படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.