
ஹிந்தி சினிமாவில் 2010இல் அறிமுகமானார் ரன்வீர் சிங். பத்மாவதி, சிம்பா, கல்லி பாய் என பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
1983 உலகக் கோப்பை வெற்றி பெற்றதை 83 என்ற திரைப்படமாக உருவாக்கி இருந்தார்கள். இந்தப் படத்தில் ரன்வீர் சிறப்பாக நடித்திருந்தார். கடந்தாண்டு வெளியான ராக்கி அவுர் ராணி திரைப்படம் வசூல் ரீதியாக அசத்தியது.
நடிகை தீபிகா படுகோனை திருமணம் செய்த ரன்வீர் சிங் அதிரடியான புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு சமூக வலைதளத்தில் எப்போதும் பிஸியாக இருப்பவர்.
தற்போது சிங்கம் 4 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ரன்வீர் சிங் உடன் மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, அர்ஜுன் ராம்பால் நடிக்கிறார்கள். ஆதித்யா தார் இயக்கும் இந்தப் படத்தினை ஜியோ ஸ்டுடியோஸ், பி62ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.
மிகவும் சர்ச்சையான தி சர்ஜிகல் ஸ்டிரைக், ஆர்டிகள் 360 ஆகிய படங்களை இயக்கிய ஆதித்யா தார் இந்தப் படத்தினை இயக்குகிறார்.
ஆதித்யா தார் நடிகை யாமி கௌதமின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து ரன்வீர் சிங், “இது எனக்காக பொறுமையாக காத்திருந்த எனது ரசிகர்களுக்கானது. உரத்த குரலில் இதை அறிவிக்கிறேன். எனது அன்பான ரசிகர்களே இதுவரை பார்க்காத சினிமா அனுபவத்தை தருவேன் என சத்தியம் செய்கிறேன்.
ஊக்கம் நிறைந்த நல்ல நோக்கத்துடன் எடுக்கப்படும் பெரிய திரில்லர் படம் உங்கள் ஆசிர்வாதத்துடன் ஒளிர்கிறோம். இந்த முறை தனிப்பட்ட முறையிலானது” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.