
மார்வெல் காமிக்ஸின் மூலம் பிரபலமான டெட்பூல், வுல்வரின் நாயகர்கள் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்கள். இதற்கு ‘டெட்பூல் வுல்வரின்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. வுல்வரின் படத்து நாயகன் ஹக் ஜாக்மேனை திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் 2007 முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் முதல் படம் 2008இல் வெளியானது. இதுவரை 33 படங்கள் இந்த யுனிவர்ஸில் வெளியாகியுள்ளது. 11 படங்கள் தயாரிப்பு, படப்பிடிப்பு, வெளியீட்டுக்கு தயாராகுமென பல்வேறு கட்டங்களில் இருக்கிறது.
உலக அளவில் இதுவரை அதிகமாக வசூலித்த சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்றால் அது இதுதான். 29.8 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2980 கோடி டாலர்) வசூலித்து அசத்தியுள்ளது.
இந்த மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் எந்தப் படமும் தணிக்கைச் சான்றிதழில் ஆர் ரேட்டிங் பெற்றதில்லை. ஆனால் இந்த டெட்பூல் வுல்வரின் படத்துக்கு ஆர் ரேட்டிங் தரப்பட்டுள்ளது. அதேசமயம் டெட்பூல் படங்கள் ஆர் ரேட்டிங் பெறுவது வழக்கமான ஒன்றுதான்.
படைப்பு சுதந்திரம் கருதி இந்த ஆர் ரேட்டிங்கில் சமரசம் செய்யவில்லை என மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் பதிலளித்துள்ளது.
இந்தப் படம் வரும் ஜூலை மாதம் 26ஆம் நாள் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தினை ஷாவ்ன் லெவி இயக்கியுள்ளார். இதில் ரியான் ரெனால்ட், ஹக் ஜாக்மேன், எம்மா கோரின், மோரினா சில்வா ஆகியோர் நடித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.