
இணையத்தொடராக வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற பீக்கி பிளைண்டர்ஸ் திரைப்படமாக உருவாக உள்ளது.
ஆஸ்கர் விருது பெற்ற சிலியன் மர்ஃபி நடிப்பில் வெளியான பீக்கி பிளைண்டர்ஸ் மிகவும் வரவேற்பு பெற்ற இணையத் தொடர் ஆகும். முதல் உலகப் போருக்கு அடுத்து தொடங்கும் கதை 2013இல் வெளியானது. 1880- 1920 ஆம் ஆண்டுகளில் பர்மிங்கமில் நடைபெற்ற கதையாக உருவாக்கப்பட்ட இந்தத் தொடரில் வெளியான பாடல்கள் வசனங்கள் அனைத்தும் மிகவும் புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதனை திரைப்படமாக எடுக்கும் முடிவினை நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. இதிலும் சிலியன் மர்ஃபிதான் நாயகனாக தாமஸ் ஷெல்பி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்டீவன் நைட் எழுதிய இந்தப் படத்தின் கதையை டாம் ஹார்பர் இயக்குகிறார். இதனை நெட்பிளிக்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்துக்காக நடிகர் சிலியன் மர்ஃபி ஆஸ்கர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.