

எஸ் ஆர் புரடக்ஷன் சார்பில் பி. ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் இணைந்து நடிக்க, புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் திரைப்படம் மெட்ராஸ்காரன்.
மலையாளத்தில் கும்பளாங்கி நைட்ஸ், ஆர்டிஎக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது என்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தப் படத்தில் தெலுங்கு நாயகி நிஹாரிகா கொனிடேலா இணைந்துள்ளார். இவர் நடிகர் வருண் தேஜின் தங்கை, நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.