பிரேம்ஜிக்கு திருமணம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் பிரேம்ஜி திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரேம்ஜிக்கு திருமணம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Updated on
1 min read

நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் சென்னை 28, மங்காத்தா, கோவா, மாஸ், தமிழ்ப்படம் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இறுதியாக, பிரேம்ஜி நாயகனாக நடித்த சத்திய சோதனை திரைப்படம் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது. தற்போது, நடிகர் விஜய் நடிக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜிக்கு 45 வயதாகிறது. ஆனால், இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்த நிலையில், சில நாள்களாக பிரேம்ஜி மீடியாவைச் சேர்ந்த பெண்ணை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என்கிற தகவல்கள் வெளியா வந்தன.

பிரேம்ஜிக்கு திருமணம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மகாராஜா வெளியீட்டுத் தேதி!

தற்போது, திருமணத்தை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குநர் வெங்கட் பிரபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும், அளவில்லாத அன்பையும் வழங்கிய இரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்!

எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. "பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்?” “சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா?" இதை எல்லாவற்றையும் விட, "பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?" என்ற உங்கள் கேள்விக்குப் பதில், வரும் ஜூன் 9ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்!

இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார்! எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன் எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம்!

கோட் அப்டேட் விரைவில்...

இப்படிக்கு, பாசத்துடன்... உங்கள் வெங்கட் பிரபு” எனத் தெரிவித்துள்ளார்.

பிரேம்ஜிக்கு திருமணம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஓடிடியில் அரண்மனை - 4 எப்போது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com