விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ஓடிடியில் அரண்மனை - 4 எப்போது?

அரண்மனை - 4 திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published On :5 ஜூன் 2024, 9:33 am IST

அரண்மனை - 4 திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் 2014-ல் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்‌ஷ்மி, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதன் வெற்றி காரணமாக, ’அரண்மனை - 2’ திரைப்படத்தை 2016-ல் த்ரிஷா, ஹன்சிகாவை வைத்து இயக்கினார்.

பின்னர் இந்தப்படமும் வசூலைக் குவித்ததைத் தொடர்ந்து 2021-ல் ’அரண்மனை - 3’ எடுக்கப்பட்டது. இதில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது, ’அரண்மனை 4’ படத்தை சுந்தர்.சி இயக்கி வெளியிட்டுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, நடிகைகள் ராஷி கண்ணா, தமன்னா ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளனர். மே.3 ஆம் தேதி இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் 3ஆம் பாகத்திற்கு மேலானது என்கிற கருத்துகளையும் பெற்றது.

இந்த நிலையில், இப்படம் வெளியான 19 நாள்களில் உலகளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அரண்மனை 4 திரைப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.

மேலும், இப்படம் ஜூன் 14 ஆம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.