
கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் 2ம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கிய திரைப்படம் 'கான்ஜுரிங் கண்ணப்பன்'.
இப்படத்தில் சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து இருந்தினர்.
இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்து இருந்த நிலையில், இப்படம் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் இருந்து நல்ல விமரிசனங்களைப் பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது.
இந்நிலையில், இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் 2ம் பாகத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், முதல் பாகத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமே கான்ஜூரிங் கண்ணப்பன் 2 ஆம் பாகத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.