
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நினைத்தேன் வந்தாய் தொடர் 100 நாள்களை நிறைவு செய்துள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மற்ற எந்தத் தொடரிலும் இல்லாதவகையில் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களையும் இந்தத் தொடர் கவர்ந்துள்ளது.
இத்தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் கணேஷ் வெங்கட்ராமன், 17 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொலைக்காட்சி தொடருக்கு திரும்பியுள்ளதால் இந்தத் தொடரின் மீது ஆரம்பம் முதலே பலருக்கு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இந்த 100 நாள் எபிஸோடுகளில் பூர்த்தியாகியுள்ளது என்றே ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு நினைத்தேன் வந்தாய் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தத் தொடரில் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், கீர்த்தனா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். அவர்களுக்கு அடுத்தபடியாக 4 குழந்தை நட்சத்திரங்களும் அவர்களை பராமரிப்பவரின் பாத்திரத்தில் ஜாஸ்மின் ராத் என்பவரும் நடித்து வருகிறார். வில்லியாக அஞ்சலி ராவ்வும் நடித்து வருகின்றனர்.
மருத்துவரான கணேஷ், 4 குழந்தைகளை தனித்த தந்தையாக வளர்த்து வருகிறார். இடையில் அவர்களை கவனித்துக்கொள்ள இறந்த நாயகியின் சகோதரியே வருகிறார். கணேஷுக்கு தெரியாது. இவர்களுக்குள் நடக்கும் கதையே நினைத்தேன் வந்தாய்.
4 குழந்தை நட்சத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுவதால், நினைத்தேன் வந்தாய் தொடருக்கு ஏராளமான இளம் ரசிகர்களும் உள்ளனர். குழந்தைகளைக் கொண்டு ரசிக்கும்படியான நகைச்சுவை காட்சிகள் இடம்பெறுவதால் இல்லத்தரசிகளையும் இத்தொடர் கவர்ந்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் ஒளிபரப்பான இந்தத் தொடர் தற்போது 100 எபிஸோடுகளைத் தாண்டியுள்ளது. இதனை படக்குழுவினர் விமர்சையாகக் கொண்டாடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.