100 நாள்களை நிறைவு செய்த ஆக்‌ஷன் சீரியல்!

சண்டைக் காட்சிகள் நிறைந்த ருத்ரா தொடர் 100 நாள்களை நிறைவு செய்துள்ளது குறித்து...
ருத்ரா தொடர்
ருத்ரா தொடர்படம் - இன்ஸ்டாகிராம்
Updated on
1 min read

சண்டைக் காட்சிகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் ருத்ரா தொடர் 100 நாள்களை நிறைவு செய்துள்ளது.

காவல் துறை அதிகாரியாக நாயகி இருப்பதால் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் இத்தொடர் எடுக்கப்பட்டு வருவதால், தனி ரசிகர் பட்டாளமே இத்தொடருக்கு உள்ளது.

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ருத்ரா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரில் நடிகை இந்திரா பிரியதர்ஷினி நாயகியாக நடிக்கிறார். நடிகர் ஹரி ருத்ரன் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் நடிகை லயா சாய், ரியா திலக் ராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ருத்ரா தொடரிலிருந்து...
ருத்ரா தொடரிலிருந்து...படம் - இன்ஸ்டாகிராம்

சன் தொலைக்காட்சியின் ஆனந்த ராகம் தொடரில் அனுஷா ஹெடோவின் சண்டைக் காட்சிகள் சின்ன திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. இதனால், ஆக்‌ஷன் நாயகி என அவரை ரசிகர்கள் அழைப்பதுண்டு. எனினும் ஆனந்த ராகம் உறவுச் சிக்கல்கள் குறித்த தொடராகவே ஒளிபரப்பானது.

இதனிடையே முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே ருத்ரா தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆக்‌ஷன் ரசிகர்களை இந்தத் தொடர் பெரிதும் கவர்ந்துள்ளது.

ருத்ரா தொடரின் போஸ்டர்
ருத்ரா தொடரின் போஸ்டர் படம் - இன்ஸ்டாகிராம்

காவல் துறை அதிகாரியாக இந்திரா நடித்து வருகிறார். இவரின் குழந்தையை இவர் இன்னும் அடையாளம் காணாததால், தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. கடத்தல், ரெளடியிசம், சண்டைக் காட்சிகள் என விறுவிறுப்பாக இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தத் தொடர் 100 நாள்களை நிறைவு செய்துள்ளது. இதனால் ரசிகர்கள் பலர் ருத்ரா குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ருத்ரா தொடர்
சாண்டி மாஸ்டருக்கு கானா வினோத் அளித்த இன்ப அதிர்ச்சி!
Summary

Action serial Rudra completes 100 days in kalainger TV

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com