திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

`கோட்’ அப்டேட்: முன்னோட்டப் பார்வை விடியோ

`கோட்’ படத்தின் முன்னோட்டப் பார்வை விடியோ வெளியானது

News image

கோட்

Updated On :22 ஜூன் 2024, 8:18 am IST

நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் விடியோ ஒன்று வெளியிட்டுள்ளது.

இன்று ஜூன் 22ஆம் தேதியில் நடிகரும் தவெக தலைவரும் விஜய்யின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு, விஜய் நடித்து வரும் 68-வது திரைப்படமான ‘கோட்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட், நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, தன்னுடைய அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில், நேற்று (ஜூன் 21) நள்ளிரவு 12 மணியளவில் `கோட்’ படத்தின் 50 வினாடி கொண்ட கிளிம்ப்ஸ் விடியோ வெளியிட்டுள்ளது. `கோட்’ கிளிம்ப்ஸ் விடியோ வெளியாகி சில மணிநேரங்களிலேயே சுமார் 10 லட்சத்து 30 ஆயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது.

அதுமட்டுமின்றி, நடிகர் விஜய்யும், மறைந்த பாடகர் பவதாரணியின் குரலை செயற்கை நுண்ணறிவு மூலமாக வடிவமைத்து, `கோட்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (கோட்) படத்தினை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் கோட் படம் வெளியாகவுள்ளது.

இருப்பினும், நடிகரும் தவெக தலைவருமான விஜய், தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சி மக்களுக்கு உதவுமாறு தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.