சினிமாவில் வாய்ப்புகள் இழந்தது குறித்து மனம் திறந்த மம்தா மோகன்தாஸ்!

திரைப்படங்களில் வாய்ப்புகள் இழந்தது குறித்து நடிகை மம்தா மோகன்தாஸ் கூறியதாவது.
மம்தா மோகன்தாஸ்
மம்தா மோகன்தாஸ்
Published on
Updated on
1 min read

தமிழில் 2016இல் சிவப்பதிகாரம் படத்தில் அறிமுகமானார் மம்தா மோகன்தாஸ். குரு என் ஆளு, தடையற தாக்க, எனிமி போன்ற படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் அதிகமான படங்களில் நடித்துள்ளார். சில தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.

மம்தா மோகன்தாஸ்
மம்தா மோகன்தாஸ்
மம்தா மோகன்தாஸ்
விவாகரத்து உண்மையா? ஜெயம் ரவியின் மனைவி பதில்!

39 வயதான மம்தா மோகன்தாஸுக்கு தோல் நிறமி இழத்தல் (vitiligo) எனும் நோய் இருப்பதாக சமீபத்தில் கூறியிருந்தார். தோலின் நிறமி செல்கள் இறப்பதால் அல்லது தொடர்ந்து வேலை செய்ய முடியாததால் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உடலில் ஏற்படுவதற்கான தெளிவான ஒரு காரணம் மட்டும் இல்லை என்றாலும், மரபணு, அல்லது சில வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகிறது.

பாடல் பாடும் மம்தா மோகன்தாஸ்
பாடல் பாடும் மம்தா மோகன்தாஸ்
மம்தா மோகன்தாஸ்
இந்தியன் 2 படப்பிடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்த ரகுல் பிரீத் சிங்!

நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழில் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்று வருகிற நிலையில் ஆங்கில ஊடகத்தில் நேர்காணலில் பங்கேற்று மம்தா மோகன்தாஸ் பேசியதாவது:

பல வருடங்களாக காணாமல்போய் மீண்டும் வருவதுதான் பல நாயகிகளின் கதையாக இருக்கும். ஆனால் நான் அப்படியில்லை. இங்கு 2 வருடங்கள் இருப்பேன். பின் ஒரு வருடம் காணாமல் போவேன். பின் மீண்டும் வருவேன். இப்படித்தான் நான் தொடக்கம் முதலே இருந்திருக்கிறேன்.

என்னைப்போல எந்த நடிகையும் தொடர்ச்சியாக நடித்ததில்லை. சினிமாவில் எனக்கு 19 வருடங்கள் ஆகின்றன. சில நல்ல படங்களை இழந்திருக்கிறேன். ஆனால் சினிமா வாழ்க்கையைவிட நிஜ வாழ்க்கை எனக்கு முக்கியமாகத் தோன்றுகிறது. நான் அதில் கவனமாகவே இருக்கிறேன்.

இந்த இடைவெளிகளில் சினிமா அதிகமாக மாறியிருக்கின்றன. பெண்களுக்கான முக்கியத்துவமும் மாறியிருக்கின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com