இந்தியன் 2 படப்பிடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்த ரகுல் பிரீத் சிங்
இந்தியன் 2 படப்பிடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்த ரகுல் பிரீத் சிங்

இந்தியன் 2 படப்பிடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்த ரகுல் பிரீத் சிங்!

நடிகை ரகுல் பிரீத் சிங் இந்தியன் 2 படப்பிடிப்பின் அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
Published on

தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகியாக நடித்த தடையற தாக்க படத்தின் மூலம் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்திருந்தார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்தியன் - 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் படத்தின் அப்டேட்களும் வெளியாகிக் கொண்டிருப்பதால் இந்தியன் - 2 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியன் 2 படப்பிடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்த ரகுல் பிரீத் சிங்
விவாகரத்து உண்மையா? ஜெயம் ரவியின் மனைவி பதில்!
நடிகை ரகுல் ப்ரீத் சிங்
நடிகை ரகுல் ப்ரீத் சிங்

தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் ரகுல் நடித்து வருகிறார். தற்போது ரகுல் பிரீத் சிங் இரண்டு ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஜாக்கி பக்னானி என்பவரை திருமணம் செய்தார்.

இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். படம் ஜூலை 12ஆம் தேதி திரைக்கு வருகிறது.

ஜாக்கி பக்னானி என்பவரை திருமணம் செய்தார்.
ஜாக்கி பக்னானி என்பவரை திருமணம் செய்தார்.
இந்தியன் 2 படப்பிடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்த ரகுல் பிரீத் சிங்
வைரலாகும் 'கல்கி 2898 ஏடி' 2ஆவது டிரைலர்!

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இந்தியன் 2 படத்தின் அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில் பேசியதாவது:

தனிச்சிறப்புடைய இயக்குநர் ஷங்கருடன் பணியாற்றியது எனது தனிச்சலுகையாக பார்க்கிறேன். அவர் ஒரு லெஜண்ட். அவரது நோக்கம், கதாபாத்திரங்களை அவர் பார்க்கும் விதம் எனக்கு ஆச்சரியமூட்டுகிறது.

படப்பிடிப்பில் அவரது நுணுக்கமான தகவல்கள் எனக்கு மிகவும் உதவியது. அவரிடம் இருந்து அதிகமாக கற்றுக்கொண்டேன். அவருடன் பணியாற்றியது உண்மையான அனுபவமாக இருந்தது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com