
நடிகர் விஜய் நடிப்பில் அவரின் 70-வது படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று தன் 50-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் விஜய், சினிமாவில் 32 ஆண்டுகளாக கதாநாயகனாக நடித்து வருகிறார்.
நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், சில தோல்வி படங்களைக் கொடுத்தாலும் தொடர் முயற்சியால் தனக்கென்ற ஓரிடத்தை அடைந்தார். சாதாரணக் காதல் கதைகளிலும் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்த பின்பே விஜய்யின் மார்க்கெட் அதிகரிக்கத் துவங்கியது.
குறிப்பாக, 2000-களின் துவக்கத்தில் விஜய் நடித்து வெளியான குஷி, பிரியமானவளே, பிரண்ட்ஸ், ஷாஜகான், பகவதி, கில்லி என தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து முன்னணி நடிகராக மேலேறி வந்தார். அதன்பின்பும், ஸ்டைலான நடிகராக குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக இன்றும் ரசிகர்களின் மனதை ஆளும் தளபதியாகவே நீடிக்கிறார்.
தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிற அளவிற்கு உயர்ந்த விஜய், சில மாதங்களுக்கு முன் அரசியல் கட்சி துவங்கியதை அறிவித்ததுடன் சினிமாவிலிருந்தும் விலகுவதாகக் கூறினார். இதனால், இன்றும் விஜய் ரசிகர்கள் இந்த முடிவை மாற்ற கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நெருக்கமான தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ விடியோ ஒன்றை வெளியிட்டது. அதில், விஜய் அரியணையில் ஏறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதற்கு முன்பாக, ஒரு கடிகாரத்தில் 69 என்கிற எண்ணிலிருந்து கடிகார முள் 70-வதைத் தாண்டிச் செல்கிறது. இதனால், விஜய் 69-வது படத்திற்குப் பின் 70-வது படத்திலும் நடிப்பார் என்றே தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.