

விஜய் நடித்துள்ள கோட் படத்தின் 2வது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
சின்ன சின்ன கண்கள் எனத் தொடங்கும் 2 வது பாடலையும் நடிகர் விஜய் பாடியுள்ளார். இந்த பாடலில் மறைந்த பவதாரணியின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் கொண்டுவந்துள்ளனர்.
முன்னதாக விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இன்று படத்தின் 2வது பாடல் மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
ஆனால் 6 மணிக்கு முன்பாகவே படத்தின் பாடலை படக்குழு இன்று வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.