கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

வெளியானது இதயம் முரளி படத்தின் புதிய பாடல்!

இதயம் முரளி படத்தின் ‘வான் வான்’ பாடல் வெளியானது தொடர்பாக...

Published On :

இதயம் முரளி படத்தின் புதிய பாடலான வான் வான் பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் இதயம் முரளி என்ற புதிய திரைப்படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடிக்கின்றார்.

நடிகர்கள் ஃபகத் ஃபாசில், பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்‌ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், இசையமைப்பாளர் தமன் இசையமைத்ததுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இதயம் முரளி திரைப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி, ரசிகர்களைக் கவர்ந்தன.

இந்த நிலையில் இதயம் முரளி படத்தின் ‘வான் வான்’ பாடல் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் பாடலை பாடகர் மோஹித் சௌஹான் பாடியுள்ளார்.

Summary

The new song "Van Van" from the movie "Idyam Murali" has been released online.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.