நடிகையும்,எம்.பியுமான கங்கனா ரணாவத் நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 6 அன்று வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ளப் படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத், அவரே இந்தப் படத்தை இயக்கி, தயாரித்துள்ளார்.
அவசரநிலை அறிவிக்கப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகளாகும் நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி போஸ்டர் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், அந்த போஸ்டரைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட கங்கனா ரணாவத், அதன் கீழ் ‘சுதந்திர இந்தியாவின் இருண்ட அத்தியாயத்தின் 50-வது ஆண்டின் தொடக்கம்’ என்று பதிவிட்டுள்ளார்.
ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் கங்கனா வெற்றிபெற்று எம்.பியான பின் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதாலும், இதற்கு முன்னர் நடித்தத் திரைப்படங்களின் தொடர் தோல்விகளாலும் இந்தப் படம் வெற்றியடையப் பெரிதும் நம்பிக்கையுடன் இருக்கிறார் கங்கனா ரணாவத்.
இதற்கு முன்னர் பலமுறை படத்தின் வெளியீடு தள்ளிப் போனதைத் தொடர்ந்து, தற்போது செப்டம்பர் 6 திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “இளைஞர்கள் பலரும் நமது நாட்டின் இருண்ட அத்தியாயத்தின் வரலாறு குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்” என்றும் கங்கனா குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
டாக்ஸிக் வெளியீட்டில் மாற்றம்!
கர வெளியீட்டு போஸ்டர்!

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

ஏ.ஆர். ரஹ்மான் மீது கங்கனா ரணாவத் பகிர்ந்த அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

விஜய்க்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால்...? | Producer Dhananjayan | TVK Vijay | Vijay Speech |
தினமணி வீடியோ செய்தி...

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

