
குபேரா படப்பிடிப்புக்காக ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வந்த நாகர்ஜுனாவிடம் ரசிகர் ஒருவர் திடீரென நெருங்கினார். இதை நாகர்ஜுனா கவனிக்காமல் சென்றுகொண்டிருந்தார். ஆனால், அவரின் பாதுகாவலர் அந்த ரசிகரைப் பின்னால் இழுத்தார்.
இதில் நிலை தடுமாறிய ரசிகர் கீழே விழச்சென்றார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன் எதுவும் நடக்காததுபோல் சென்ற நாகர்ஜுனாவைக் குறிப்பிட்டு மனிதத் தன்மையற்ற செயல் என ரசிகர்கள் அவரைக் கண்டித்து வருகின்றனர். நாகார்ஜுனாவுடன் நடிகர் தனுஷும் அங்கு உடன் வந்தது பெரிதும் சர்ச்சையை கிளப்பியது.
இந்தச் சம்பவத்துக்கு நடிகர் நாகார்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில், “இது இப்போதுதான் எனது கவனத்துக்கு வந்தது. இது நடந்திருக்கக்கூடாது. அந்த ஜென்டில்மேனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வருங்காலத்தில் இது இனிமேல் நடக்காமல் முன்னெச்சரிக்கையுடன் இருப்பேன்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் அந்த மாற்றுத்திறனாளி நபரை சந்தித்து பேசியுள்ளார் நாகர்ஜுனா. இந்தப் படங்கள் சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளன.
குபேரா படப்பிடிப்பில் நடிகர் தனுஷுடன் நாகர்ஜுனா இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சேகர் கமூலா இயக்கும் இப்படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.