
நடிகை நிவேதா தாமஸ் காதலைக் குறிக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நடிகை நிவேதா தாமஸ் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய்யுடன் ஜில்லா, ரஜினியுடன் தர்பார் படங்களில் நடித்து கவனம் பெற்றவர். முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் கதாநாயகி வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் நிதானமாக படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
இந்த நிலையில், நிவேதா தாமஸ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘காலம் கடந்தாலும், இறுதியாக..’ என்கிற வார்த்தையில் இதயக் குறியைச் சேர்த்து பதிவு ஒன்றைப் பதிவிட்டார். இதனால், நிவேதா காதலிப்பதைத்தான் இப்படி மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இது காதலா இல்லை தன் திருமணத்தை அறிவிக்கப்போறாரா அல்லது இது படத்தின் புரோமோஷனுக்காகவா என்றும் தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.