நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பிரபல நடிகைக்கு புற்றுநோய்!

பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான் தனக்கு புற்றுநோய் இருப்பதை அறிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜூன் 2024, 10:33 am

DIN

பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான் தனக்கு புற்றுநோய் இருப்பதை அறிவித்துள்ளார்.

நடிகை ஹினா கான் (36) பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பாராட்டுகளைப் பெற்றவர்.

பிக்பாஸ் 14 நிகழ்ச்சியில் பங்குபெற்று கவனம் ஈர்த்தார். சமீபத்தில், இவர் புற்றுநோய் தொடர்பாக சிகிச்சை எடுத்து வருவதாகத் தகவல் வெளியானது. இது, வதந்தியாகவே இருக்கும் என ரசிகர்கள் நம்ப மறுத்தனர்.

Story image

இந்த நிலையில், ஹினா கான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு 3ஆம் கட்ட மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மேலும் அந்தப் பதிவில், “என் நலன் விரும்பிகளுக்கு முக்கியமான செய்தியைப் பகிர்கிறேன். நான் 3 ஆம் நிலை மார்பக புற்றுநோய் பாதிப்பில் இருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் தைரியமாகவே இருக்கிறேன். இதற்கான சிகிச்சையும் துவங்கியுள்ளது. உங்களின் அன்பு, பிராத்தனை, ஆசீர்வாதங்களைப் பாராட்டுகிறேன். உங்களின் தனிப்பட்ட அனுபவங்களும், ஆதரவான ஆலோசனைகளும் இந்த பயணத்தில் என்னை முன் நகர்த்தும். உங்கள் அன்பிற்கும் ஆசிர்வாதங்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெண்களைத் தாக்கும் மார்பக புற்றுநோய் தொடர்பாக ஆலோசனைகளும் அறிவுரைகளும் அதிகரித்து வரும் நிலையில், ஹினா கானின் பாதிப்பு பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகைகள் சோனாலி, தாகிரா காஷ்யப் (நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாவின் மனைவி), மனிஷா கொய்ராலா உள்ளிட்டோரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை சோனாலி

நடிகை சோனாலி

தாகிரா காஷ்யப்.

தாகிரா காஷ்யப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.