ப்ளூ ஸ்டார் படத்தினை பார்த்த நடிகர் பாண்டியராஜனின் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார் நடிகர் பிரித்வி.
இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் வெளியான திரைப்படம் ப்ளூ ஸ்டார்.
லெமன் லீப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படத்தில், அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, இளங்கோ குமாரவேல், பகவதி பெருமாள், அருண் பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இப்படம் டெண்ட்கொட்டாவிலும் (வெளிநாடுகளுக்கு) அமேசான் பிரைமிலும் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் பிரித்வி, அவரது தந்தை பாண்டியராஜன் ப்ளூ ஸ்டார் படத்தினை ஓடிடியில் பார்க்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். அதில், “இது உங்களுக்காக அப்பா. ப்ளூ ஸ்டார் படத்தில் என்னைப் பார்க்கும்போது உங்கள் முகத்தில் வரும் மகிழ்ழ்சி எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதி. வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு உங்களை காதலிக்கிறேன். ப்ளூ ஸ்டார் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.