விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் தமன்னா.
பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் இவருக்கு புகழை தந்தது. சமீபத்தில், நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து 'ஜெயிலர்' படத்தில் நடித்து காவாலா பாடலில் வைரலானார்.
பாலிவுட் படங்களிலும் இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
ஒரு படத்திற்கு ரூ.2 கோடி வரை சம்பளம் பெற்று வந்தார். இந்த நிலையில், லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடித்தபின் தமன்னாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. இதனால், தமன்னா தன் சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்திவிட்டதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.