ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

போர் தொழில் இயக்குநருடன் இணையும் அசோக் செல்வன்?

நடிகர் அசோக் செல்வன் போர் தொழில் படத்தின் இயக்குநர் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :7 மார்ச் 2024, 5:46 am

DIN

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான போர் தொழில் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.

கிரைம் திரில்லர் பாணியில் உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது.

தொடர்ந்து, அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ படமும் வெற்றியடைந்ததால் அசோக் செல்வன் நிதானமாக கதைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார்.

இந்த நிலையில், போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் மீண்டும் நடிக்க அசோக் செல்வன் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.