புகைப்படம் எடுக்கும்போது நடிகை காஜல் அகர்வாலிடம் தவறாக நடந்துகொண்ட ரசிகர்!

புகைப்படம் எடுக்கும்போது நடிகை காஜல் அகர்வாலிடம் தவறாக நடந்துகொண்ட ரசிகர்!

பிரபல நடிகை காஜல் அகர்வாலிடம் ரசிகர் ஒருவர் தவறாக நடந்துகொண்ட விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Published on

பிரபல நடிகை காஜல் அகர்வாலிடம் ரசிகர் ஒருவர் தவறாக நடந்துகொண்ட விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். இவருக்கும் தொழிலதிபர் கெளதம் கிச்லு என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. 2022 ஏப்ரலில் ஆண் குழந்தைப் பிறந்தது. திருமணத்துக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் காஜல்.

தமிழில் கடைசியாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கோமாளி திரைப்படம் வெற்றி பெற்றது. 2023இல் வெளியான கோஷ்டி, கருங்காப்பிடம் படங்கள் பெரிதாக கவனம் பெறவில்லை.

புகைப்படம் எடுக்கும்போது நடிகை காஜல் அகர்வாலிடம் தவறாக நடந்துகொண்ட ரசிகர்!
விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் நடிப்பது எப்போது?: ராஷ்மிகா பதில்!

தற்போது இந்தியன் 2 படத்திலும் தெலுங்கு, மலையாளம் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், காஜல் அகர்வால் மார்ச் 6ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள பேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ரசிகர் ஒருவர் செல்ஃபி (தற்படம்) எடுக்கும்போது தவறாக நடந்துகொண்டார். அதனால் காஜல் அகர்வாலின் முகம் மாறியது. இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நடிகை வித்யா பாலனுக்கும் இது போல நடந்தது. நடிகர்கள், நடிகைகளிடம் பொது வெளியில் அத்துமீறுவதும் அவர்களது அனுமதியின்றி அவர்களை தொடுவதும், புகைப்படம் எடுப்பதும் அநாகரீகமான செயல்களென ரசிகர்கள் உணர வேண்டும் எனவும் இனிமேலாவது பொறுப்புணர்வுடன் நடந்துக்கொள்ள வேண்டுமென இணையவாசிகள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com