டோவினோ தாமஸின் ‘நடிகர்’ பட புகைப்படம்!

டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள நடிகர் படத்தின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
டோவினோ தாமஸின் ‘நடிகர்’ பட புகைப்படம்!

மலையாளத்தில் 2012இல்  துணை நடிகராக அறிமுகமான டோவினோ தாமஸ் பின்னர் முக்கியமான நடிகராக வளர்ந்துள்ளார். இவரது ‘மின்னல் மிரளி’ படம் உலகம் முழுவதும் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. மாயநதி, தீவண்டி, மாரடோனா, லூக்கா, வைரஸ், கல, 2018 ஆகிய படங்கள் மிகவும் கவனிக்கப்பட்டன. 

அதிலும் ‘2018’ படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்க அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழில் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். 

டோவினோ தாமஸின் ‘நடிகர்’ பட புகைப்படம்!
காதலில் தோற்ற கதாபாத்திரத்தில் நித்யா மேனன்!

இவர் நடித்துள்ள 'நடிகர் திலகம்' படத்தின் பெயர் மாற்றப்பட்டது. இந்தப் படத்தினை பிரபல நடிகர் லாலின் மகன் ஜுன் பால் லால் இயக்கியுள்ளார். பிரபல தமிழ் நடிகர் சிவாஜியின் ரசிகர்கள் இந்தப் படத்தின் தலைப்புக்கு வருத்தம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. 

டோவினோ தாமஸின் ‘நடிகர்’ பட புகைப்படம்!
ஓடிடியில் மிஷன் சேப்டர் 1

இதனைத் தொடர்ந்து படத்தின் பெயர் ‘நடிகர்’ என மாற்றப்பட்டது. இதைப் பகிர்ந்த நடிகர் டோவினோ தாமஸ், “புதிய தலைப்பு, அதே அற்புதமான கதை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் படத்தில் இருந்து புதிய புகைப்படத்தினைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com