நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

காதலில் தோற்ற கதாபாத்திரத்தில் நித்யா மேனன்!

நடிகை நித்யா மேனன் காதல் தோல்வியடைந்த பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

News image

படம்: இன்ஸ்டா/ நித்யா மேனன்

Updated On :15 மார்ச் 2024, 1:10 pm IST

நடிகை நித்யா மேனன் காதல் தோல்வியடைந்த பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

கன்னட படத்தின் மூலம் 2006-இல் சினிமாவில் நடிகையாக  அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

குறிப்பாக, தமிழில் அவர் நடிப்பில் வெளியான, ‘காஞ்சனா - 2’, ‘ஒகே கண்மணி’, ‘மெர்சல்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. 

Story image

தற்போது, சில மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவான ‘குமாரி ஸ்ரீமதி’, 'மாஸ்டர்பீஸ்’ ஆகிய இணையத்தொடர்களும் நல்ல வரவேற்பினை பெற்றது.

Story image

தற்போது நடிகர் தனுஷின் 50வது படமான ராயன் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் காதல் தோல்வியடைந்த பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் காமினி இயக்கத்தில் பெயரிடப்படாத காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் வினய் ராய், நவ்தீப், தீபக் பரம்பொள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ப்ரீத்தா ஜெயராமன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். விஷ்ணு வரதனிடம் உதவி இயக்குநராக இருந்த காமினி இந்தப் படம் குறித்து ஆங்கில ஊடகத்தில் பேசியதாவது:

Story image

பொதுவாக படங்கள் ஆண்களின் காதல் தோல்வியினைப் பற்றி மட்டுமே பேசுகிறது. ஆனால் இந்தப் படம் காதல் தோல்வியடைந்த பெண்ணைப் பற்றிய கதை. காதல் தோல்வியின்போது அவர் என்னவெல்லாம் பிரச்னைகளை எதிர்கொள்கிறார் என்பதையும் இந்தப் படம் பேசும். இந்த ‘சூப் கேர்ள்’(காதல் தோல்வியடைந்த பெண்களை குறிக்கும் சொல்) கதாபாத்திரத்தில் நித்யா நடிக்கிறார். சமூகத்தில் இருக்கும் பொதுவான வழக்கத்தினை உடைக்கும் கதாபாத்திரமாகவும் தனது அனுபவங்களின் ஊடே இந்தப் பிரச்னைகளில் இருந்து எப்படி மாறுகிறார் என்பதையும் படம் பேசும் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.