தமிழில் ஒப்பந்தமான முதல் படம் 'இதயம் முரளி' கயாடு லோஹர்!
'டான் பிக்சர்ஸ்' ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் வெளியான படம் 'இதயம் முரளி'. அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய கயாடு லோஹர், 'தமிழில் நான் முதல் முறையாக ஒப்பந்தமான படம் 'இதயம் முரளி'தான். அதனால் இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அமுதா கதாபாத்திரம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இந்தக் கதாபாத்திரத்தை என்னை நம்பிக் கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி. மீண்டும் இதே படக்குழுவுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.
ப்ரீத்தி... இந்தப் படத்தில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். நம்முடைய நட்பு குறித்து உங்களுக்கே தெரியும். இந்தப் படத்தில் அதர்வாவுடன் இணைந்து அதிக காட்சிகளில் நடிக்கவில்லை என்றாலும், நாம் இணைந்து வரும் காட்சிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மீண்டும் நாம் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும். இந்தப் படத்துக்கு நீங்கள் கொடுத்த அன்புக்கு ரொம்ப நன்றி' என்று பேசியிருக்கிறார்.

தொழில்முனைவோராக மாறிய சாக்ஷி!
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ள பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனமான ' ஒகேயு யு'-வை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆராய்ச்சி, தயாரிப்பு மேம்பாடு மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், இறுதி 11 மாதங்களில் மட்டும் 551 முறை தயாரிப்புக் கலவையில் மாற்றங்களைச் செய்து, தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப தயாரிப்பை உருவாக்கியுள்ளார்.
தயாரிப்பின் தேவையைக் கண்டறிவது முதல், அதன் தரம், தயாரிப்பு கலவை மற்றும் நிறுவனத்தின் நோக்கத்தை வரையறுப்பது வரை அனைத்துப் பணிகளிலும் அவர் நேரடியாகப் பங்கேற்றுள்ளார்.
உடல்தகுதியைப் பராமரிப்பதிலும், திரைப்படப் பணிகளைச் சமநிலைப்படுத்துவதிலும் ஏற்பட்ட தனது அனுபவங்களே, இந்தியாவில் தரமான ஊட்டச்சத்து தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை தனக்கு உருவாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சாக்ஷி அகர்வால் மேலும் கூறுகையில், 'இன்று நான் பல ஆண்டுகளாக உருவாக்கி வந்த கனவை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.

போற்றி பாதுகாக்கும் ஆசிர்வாதம் தேசிய விருது குறித்து தனுஷ்!
அண்மையில் 72-ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழில் தனுஷின் 'ராயன்' படத்துக்குச் சிறந்த திரைப்பட விருதும், தனுஷுக்கு 'கேப்டன் மில்லர்' படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இயக்குநராகத் தனது முதல் தேசிய விருதைப் பெறவிருக்கிறார் தனுஷ். தனக்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்துச் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார்.
அதில், 'ராயன்' படத்துக்காக சிறந்த தமிழ்ப்படத்துக்கான தேசிய விருதையும், 'கேப்டன் மில்லர்' படத்துக்காக ஸ்பெஷல் மென்ஷன் தேசிய விருதையும் பெற்றிருப்பதில் நான் உண்மையிலேயே பெருமகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகிறேன். மதிப்புக்குரிய தேசியத் திரைப்பட விருதுகளின் நடுவர் குழுவுக்கும் மற்றும் தேர்வுக் குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
எனது கலைப்பயணம் முழுவதும் தங்களது அசைக்க முடியாத ஆதரவை வழங்கி வரும் பத்திரிகை, ஊடகம் மற்றும் சமூக வலைத்தளத் தோழமைகளுக்கு எனது மனப்பூர்வமான நன்றி. ஒரு நடிகராக இது எனது மூன்றாவது தேசிய விருது மற்றும் ஒரு இயக்குநராக இது எனது முதல் தேசிய விருது ஆகும்.
எனது பலத்தின் தூண்களாக விளங்கும் எனது ரசிகர்கள் இல்லாமல் இது எதுவுமே சாத்தியமாகி இருக்காது. 'கேப்டன் மில்லர்' படத்திற்கான இந்த அங்கீகாரம் எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. ஏனெனில், இன்று வரையிலான எனது சிறந்த நடிப்பு இதுதான் என்று நான் எப்போதும் நம்புகிறேன்.
நான் மிகவும் போற்றி மதிக்கும் ஒரு நடிப்புக்காக இந்தச் சிறப்புத் தகுதி பெறுவது, இந்தக் கெளரவத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. மேலும், முதல் முறை என்பது எப்போதும் மறக்க முடியாதது.
'ராயன்' படத்துக்காக ஓர் இயக்குநராக நான் முதல் தேசிய விருதை வென்றிருப்பது, நான் என்றும் போற்றிப் பாதுகாக்கும் ஓர் ஆசிர்வாதம்' எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோலிவுட் ஸ்டூடியோ!
நாட்டார் கதையின் தாக்கம்தான் தி டார்க் ஹெவன்! இயக்குநர் பேட்டி!

மற்ற நடிகர்களுக்கு இல்லாத திறமை எம்.ஜி.ஆருக்கு இருந்தது! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 3

இன்றளவும் கவனம் பெறும் விஜய் - த்ரிஷா கூட்டணியின் திரைப்படங்கள்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



